By Vaitheeswaran.B
தினம் தினம் புது தினம்
புதுமை தேடும் புவி இதனில்
புகழ் தேடும் மானிடர்
ஒருவன் வாழ ஒருவர் தாள
அவர் அவர்தம் இட்ட கட்டளைகள் பல
அதில் ஈரம் துளியும் இல்லை
எனில் எங்கு நிலைக்கும் தர்மம்
பொறுக்கும் வரை பொருப்பால் பூமித்தாய்
அவள் வெகுண்டெழுந்தால் பிறக்கும் நீதி
அதுவே ஒவ்வோர் உயிர்க்கும் சுதந்திரம் எனும் பெரும் தீ
புவி எங்கும் புரட்சி வெடிக்க
இறக்கம் எனும் அவள் இரத்தம் கொதிக்க
பொறுமை எனும் அவள் சீர் குலைய
அவள் இரத்தம் புவி எங்கும் புரட்சி நிதியாய் கொந்தளிக்க
காந்தி, அம்பேத்கர், நேதாஜி, வள்ளியம்மை
எனும் பல விருஷங்கள் முளைத்தன
அந்த விருஷங்கள் தன்னையே சுடராக உருக்கி வார்த்த சிலயே
இன்றைய இந்தியா, மனதில் கொள் மானிடா
தர்மம் நிலைக்கும் வரை யே சுதந்திரம் நிலைக்கும் !
By Vaitheeswaran.B
Comments