By Srinivasan M
மெய்யாய் இருப்பினும், பொய்யாய் இருப்பினும்,எம் சித்தம், அது களங்கவில்லை,நித்தம் நித்தம் நீ இன்றி,செத்து செத்து பிழைத்தேனடி,யுத்தம் ஒன்று செய்திடவும்.. உந்தம்விழிகள் என்னை தூண்டியதே...!மீண்டும் மீண்டும் உன் புன்னகையால்,என்னை,கொன்று மண்ணில் புதைத்தாயடி...நினைவினை மறந்திட நான் தவிக்க...என் சிந்தையிலும் வந்தாய் பெண்ணே!..வெட்கத்தில் உந்தம் கண்கள் சுருங்க,எந்தன் பேரழகே!..உன்னை கட்டிக்கொள்ள நினைக்கையில் இந்த கனவும் கலைந்ததே!.
By Srinivasan M
Comentarios