By Srinivasan M
வெள்ளைப் பூக்களும் அந்த வெண்ணிலா முன் தன் கர்வம் தொலைக்க
மின்மினி பூச்சிகளும் அந்த விண்மீன் மீது காதல் தொடுக்க
கோவில் சிற்பங்களும் அவள் மீது கோபம் கொள்ள
அந்த பிரம்மனும், காதல் கொண்ட நேரத்தில் செதுக்கிய சிற்பம் நீயோ!..
பட்டாம்பூச்சிகளின் கண் பறிக்கும் அழகும் உன் கருமைவிழி முன் தோற்றே போகுதடி.
அந்த ஈசனும் காதல் கொள்ளும் ஓவியம் நீ!
இந்த மண்பொம்பை அதை மறைப்பதோ?
இல்லை....
முத்துச் சிரிப்பின் மொத்த அழகில் எம் சித்தம் கலங்கியதை ஒப்புக்கொள்ளூம்
மயக்கம் கொண்ட காதலன் இவனடி.....
என் கனவின் காதலியே...!
By Srinivasan M
Comments