top of page
Noted Nest

The Judge

Updated: Oct 5, 2024

By Vinodh Kumar R



JUDGE: ஆமா password கேக்கும் ., தோ இருங்க ப்ரோ அனுப்புற., என்று password அனுப்பினான் 


அசோக் password என்டர் செய்து உள்ளே சென்றான். அதில் “welcome bitch now you are fucked up”. என்று ஏளனமான சிரிக்கும் சத்தம் கேட்டது..,அதை பார்த்து அசோக் சற்று குழம்பினான் 


அசோக் : ப்ரோ என்ன ப்ரோ உள்ள போன என்னென்னமோ வருது., டாகுமென்ட் எது வரலையே, பணமும் எதுவும் வரல., என்ன ப்ரோ இது என்று சற்று பதறினான் 


JUDGE : அது ஒன்னுமில்ல அசோக் எவ்ளோ பணம் தரலாம்னு யோசிக்கிற அதான் இன்னு வரல 


அசோக்: (அவன் பெயரை சொல்லி கூப்பிட்டதும் சற்று திடுக்கிட்டான்.) ப்ரோ மொத நீங்க யாருன்னு சொல்லுங்க 


JUDGE:  ஏன் அசோக் என்ன ஆச்சி ... ஒருமாதிரி பதற்றமா பேசுறிங்க 


அசோக்: ப்ரோ என்னக்கென்னமோ எதுவுர்லவாங்க பேசிகளா 


JUDGE: நாளிக்கி பேசுறதுக்கு என்னால வரமுடியாது அசோக் அப்பறம் உங்களோட என்னால பிசினஸ்ல சேர முடியாம கூட போகலாம் பாத்துகோங்க 

ம் செரியாபடல...நீங்க பணம் எதுவும் அனுப்பவேண்டா நாளிக்கி நே

அசோக்: நாளிக்கி நீங்க வந்திங்கன பேசிக்கலாம் இல்லன வேண்டாம் உங்களுக்கு எப்போ பிரீயோ அப்போ வாங்க பாத்துக்கலாம் 


JUDGE; அப்போ உங்களுக்கு இப்ப பணம் வேண்டாமா அசோக் ! நல்ல யோசிச்சி சொல்லுங்க 


அசோக் (சற்று பயத்துடன்) : சார் நீங்க நேர்ல வாங்க பேசிக்கலா 


JUDGE (நக்கலாக சிரித்தான்): அப்போ உங்க பணம் உங்களுக்கு வேண்டாமா அசோக் 


அசோக் பதற்றத்துடன் : என் பணமா! என்ன சொல்ற ?


JUDGE : ஆமா உன் பணம் தான் TBI பேங்க் ல 9,67,611 வெச்சிர்கியே அதுதான் ., என்ன கரெக்ட் அஹ் என்று மீண்டும் சிரித்தான் 


அசோக் (கோபத்துடன்): டேய் யாருடா நீ உன்னக்கு எப்படிடா தெரியு இதுலா ., எங்க இருந்துடா பேசுற 


JUDGE சிரிப்புடன் : கோவப்படாதிங்க அசோக்., பிசினஸ்ல பொறுமை ரொம்ப முக்கியம்., கஸ்டமர் கிட்ட இப்படியா பேசுவிங்க 


அசோக் (ஆக்ரோஷத்துடன்) : கெட்ட வார்த்தைகளில் திட்டியவாறு மவனே நீ யாருன்னு சொல்ற மோதல 


அப்போது அசோக்கிற்கு மெசேஜ் ஒன்று வந்தது அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான் அதில் அவன் பேங்க் அக்கௌண்டில் இருந்து 1,௦௦,௦௦௦ ருபாய் எடுக்கப்பட்டிருந்தது என்று தகவலிருந்தது 


JUDGE (நக்கலாய்) ; என்ன அசோக் திடீர்னு அமைதியாகிடிங்க.., எதுவும் பிரச்சனையா 


அசோக் (நடுக்கத்தில்) : ஏய் .., என் அக்கௌண்டில் இருந்த பணத்த நீதா எடுத்துருக்க .., என் பணத்த மரியாதையா கொடுத்துருடா நா ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாரிச்சது டா ...


JUDGE (பயங்கரமாக சிரித்தபடியே); எது கஷ்டபட்டு சம்பாரிச்சியா ! நீ தான அசோக் இந்த பிசினஸ் பண்றது ரொம்ப ஈசி அதுனாலதான் கம்பெனி பேரே easy business னுலாம் சொன்ன... இப்ப கஷ்டபட்டனு சொல்ற..,என்ன அசோக் இப்டி மாத்தி மாத்தி பேசுற.


அசோக்: டேய் வேண்ணா


JUDGE; சரி அசோக் அத விடு எவ்ளவோ கோடி சம்பாரிக்க போற ஒரு ஒருலக்ச்சரூபா போனதா என்ன இப்ப 


அசோக் (கண்கலங்கிவாறு): டேய் யார்டா நீ .., என் பணத்த கொடுத்துரு டா., ஒரு ஒரு ரூபாய்யு கஷ்டப்பட்டு சேத்தது டா .., தயவசெஞ்சி கொடுத்துரு டா ..,  


JUDGE (நக்கலாக); டேய் நிறுத்துடா ... சும்மா கஷ்டபட்ட பிதுகப்பட்டன்னு...அப்பரோ உண்மையா கஷ்டபடுரவலா என்னனு சொல்லுவா 

 

அசோக் (கோபத்துடன்): கெட்ட வார்த்தையில் “யாருடா நீ“ என்று கத்த அவனுக்கு மீண்டும் ஒரு மெசேஜ் மீண்டும் ஒரு லக்சம் அவன் அக்கவ்ண்டிலிருந்து எடுக்கபட்டிருந்து என்பதை கண்டு அசோக் நிலைகுலைந்தான் .


JUDGE (சிரித்தவாறு) : பொறுமை வேணும் அசோக் ...இப்ப கோவபடுற நிலமைலையோ கேள்வி கேக்குற இடத்துலையோ நீ இல்ல...புத்திசாலிதனமா அடுத்து பேசுற ஒவ்வொரு வார்த்தையையு யோசிச்சி பேசு ...இல்லன உன்னகுதா லாஸ் .


அசோக் எதுவும் பேசாமல் அமைதியானான் .


JUDGE : வெரி குட் , இப்படிதா எப்பவும் பொறுமையா இருக்கனும்...சரி நம்ம விஷயத்துக்கு வருவோம் ....நா யாருன்னு  ரொம்ப நேரமா கேட்டுற்றுகள்ள ...அதுக்கு முன்னாடி முதல நீ யாரு என்ன பண்ணணு  தெரிஞ்சிக்கலாம்..ஓகே வா ...

இரவு 10.20., நெடுஞ்சாலையில் வாகனங்கள் ரெட்சிக்னளால் நின்றுகொண்டிருக்க சிலர் சாலையோரத்தில் இருக்கும் சிற்றுண்டிகடைகளில் சாப்பிடுகொண்டிருந்தனர். அதில் ஒருவன் சாப்பிட்டுவிட்டு சாலையைக் கடந்துசெல்ல அதேநேரம் சிக்னல் பச்சைநிறம் ஒளிர அணைத்து வாகனங்களும் ஹோரன் அடித்து கூச்சலிட அந்த இடமே அதிர்ந்தது . அந்த சத்தம் அதே சாலையோரத்தில் இருக்கும் 3 மாடி கட்டிடத்தில் ஒரு ரூமில் தூங்கிகொண்டிருந்த அசோக்கிற்கு கேட்க திடுக்கிட்டு எழுந்தான். 


ஏதோவொரு கனவிலிருந்து மீண்டும் நினைவுக்கு வந்தவன் கட்டிலிலிருந்து எழுந்தான். டிவி பார்த்தபடியே வெகுநேரம் களைப்பில் தூங்கிவிட்டதை உணர்ந்தவன் அவனை சுற்றி இருந்த சுவற்றினை பார்த்தான். அதில் தன்னம்பிக்கை மற்றும் பணம் சார்ந்த பலவாசகங்கள் ஓட்டிருந்தன. சுவற்றுக்கு அருகில் ஒரு வெள்ளை எழுத்து பலகை ஒன்று இருந்தது. அதில் 1000000(10 lakhs) - target achieved என்று எழுதிருந்தது. அதனை அவன் ஒரு பேனாவினால் அடித்துவிட்டு next target - 20 lakhs என எழுதினான். அந்த பலகைக்கு கீழ் ஒரு கோப்பை ஒன்று இருந்தது. அந்த கோப்பையில் “Golden Star” என்ற எழுத்து பொறிக்கபட்டிருந்தது. அதை பார்த்ததும் அவன் கண்ட  கனவு மீண்டும் நினைவிற்கு வந்தது.


அன்று காலை அவன் வேலைபார்க்கும் நிறுவனத்தில் நடந்த விழாவில்தான் அவனுக்கு அந்த கோப்பை வழங்கப்பட்டது. Easy business  என்று அழைக்கப்படும் அந்த நிறுவனத்தின் தலைவரான ஒம்கர் அந்த விருதை அசோக்கிற்கு வழங்கினார். அந்நிறுவனத்தில் வேலைபார்க்கும் பலருக்கும் கனவு விருது தனக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியில் மேடையில் உறைந்திருந்தான். அசோக்கை போல் மேலும் பலர் வளரவேண்டுமென்று ஒம்கர் அனைவரையும் வாழ்த்த அரங்கமே அதிர்ந்தது அந்த சத்தத்தில் அசோக் மெய்சிலிர்ந்து போக வாகனங்கள் எழுப்பிய ஒலி அவனுக்கு கரகோஷன்களாய் கேட்டு கண்விழித்தது அவன் நினைவிற்கு வந்தது.


அப்போது ரஜினி நடித்த சிவாஜி படம் டிவியில் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டான். அதில் ரஜினி “ Rich gets richer ; poor gets poorer “ இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்று ரஜினி கூறுவதை கேட்ட அசோக் அதுதான் அவனுங்க விதி என்று கூறி ஏளனமாக சிரித்தான். அப்போது திடிரென்று மின் தூண்டிக்கப்பட்டு அந்த இடமே இருளானது. வெளிச்சத்திற்காக அசோக் அவன் போனை தேட சரியாக அந்நேரம் அவன் போனிற்கு யாரோ அழைக்க சத்தம் வந்த இடத்தை நோக்கி சென்று போணை எடுத்தான். அதில் JUDGE  என்று வர குழம்பிய அசோக் அழைப்பை எடுத்தான்.


அப்போது போனின் மறுபக்கத்திலிருந்து 


JUDGE (J) : சார் , வணக்கம் சார் , உங்கள இந்த நேரத்துல டிஷ்டப் பண்ணதுக்கு சாரி சார் , ஒரு அஞ்சி நிமிஷம் உங்ககிட்ட பேசலாமா என்று அவன் கேட்டான்.


அசோக் : இட்ஸ் ஓகே , நீங்க யாரு ?


JUDGE : சார் நான் இன்னிக்கி நடந்த நிகழ்ச்சில உங்கள பார்த்த., வேற லெவல் சார் நீங்க , எனக்கும் உங்கள மாதிரியே ஸ்டார் விருது வாங்கனும்னு ஆசையா இருக்கு சார் . எண்ணையு உங்க பிசினச்ஸ்ல setthukonga சார் என்று அவன் கேட்டான் .


அசோக் பெருமிதத்துடன் : நன்றி ஜி , நீங்க என சார் ல கூப்ட வேண்டாம் நா எல்லாருக்கும் பிரிண்டு தான் நீங்க என்ன பேர் சொல்லியே கூப்டலா . உங்க பேர் என்ன ? என்று கேட்டான் 


JUDGE : ஐயோ சார் நா எப்டி உங்க பேர சொல்றது ., என்னால முடியாது சார் ., ப்ளீஸ் சார் என்ன உங்க பிசினெஸ்ல மட்டும் சேதுகோங்க சார் நா எவ்ளோ பணம் கற்றதுனாலு ரெடி சார் என்று கூறினான்.


இதை கேட்ட அசோக்கிற்கு சந்தோஷம் தாளவில்லை . இந்த நாள் தனக்கு மறக்க முடியாத நாள் என்று மனதில் கொண்டாடினான் . அவன் அடுத்த இலக்கை அடைதிட பேச்சு கொடுத்தான் . 


அசோக் : ப்ரோ கண்டிப்பா நா உங்கள சேத்துகுற . உங்களுக்கு நம்ம பிசினஸ் பத்தி தெரியும்ல .உடல் ஆரோகியத்துக்கு பயன்படுற பொருள்தா நம்ம ப்ரொடக்ட் அத மூணு விதமா நம்ம விக்கிறோம் .


ஒன்னு : ஒரு விலைஉயர்ந்த பொருள் ஆ வாங்கி அதா ரெண்டு மடங்கா விக்கணு அதுல ஒரு 8% கமிசன் உங்களுக்கு வரும் .


ரெண்டு : நீங்க எங்க கம்பெனியோட பிரான்சிஸ்ல ஒரு பங்குதாரா சேரனும். அதுல  18% உங்களுக்கு கமிசன் கிடைக்கும் .


மூணாவது : முதல சொன்ன மாறி ஒரு பொருள நல்ல லாபத்துக்கு யாருக்கு விக்கிரோமோ அவங்களையு இந்த பிசினஸ்ல சேக்கணும் . அவங்க எத்தன பெற sekkurangalo அதுல உங்களுக்கு 4% லாபம் கிடைக்கும். என்ன கேட்ட நீங்க ரெண்டாவது வழிதான் பெஸ்ட்ன்னு சொல்லுவ .இந்த பிசினஸ் பண்றதும் ரொம்ப ஈசி அதுனாலதான் எங்க கம்பெனி பேரே easy business ன பாத்துக்கோங்க . நீங்க ஆசைபட்டமாரி சீக்கிரமா ஸ்டார் ஆகிடலா பல கோடிருபாய் கூட சம்பாரிக்கலாம் என்று கூறினான் .


JUDGE: சார் நா இப்பவே ரெடி, எவ்ளோ பணம் கட்டணும்னு மட்டும் சொல்லுங்க, இப்பவே கற்ற 


அசோக் : ப்ரோ சூப்பர் ப்ரோ, செம்ம ஸ்பீடாஹ் இருக்கீங்க இந்த பிசினஸ்ல இப்பிடி இருந்ததா ஜெய்க்க முடியும்.., நாளிக்கே நா உங்கள வந்து பாக்குற.


JUDGE: ப்ரோ அவ்ளோ நேரம்லா வெயிட் பண்ண முடியாது நா இப்பவே சேர்ந்துகுர எவ்ளோ பணம் கட்டணும்னு மட்டும் சொல்லுங்க 


அசோக்: ப்ரோ உங்க ஆர்வம் எனக்கு புரியுது அனா பணத்த தாண்டி என்குயரி டாகுமென்ட்னு நிறைய பார்மாலிட்டிலாம் இருக்கு  

 

JUDGE: ப்ரோ அதுல நாளிக்கி பாத்துக்கலா , எனக்கு உங்கமேல நம்பிக்க இருக்கு, நா பணத்த இப்பவே கட்டிற இப்போ நா எவ்ளோ பணம் உங்களுக்கு அனுப்பனும் அத மட்டும் சொல்லுங்க 


அசோக்:(மனதில்: யாருடா இவன்) சரி ப்ரோ அப்ரோ உங்க இஷ்டம் ஒவ்வொரு பிளான்கும் ஒவ்வொரு அமௌன்ட் 

பிளான்  1க்கு : 32,௦௦௦ பிளஸ் டாக்ஸ் 

பிளான் 2க்கு : minimum 3௦௦௦௦௦ மூன்று லக்சம் இருந்து இருவது லக்சம் வரைக்கும் ஆகும் 

பிளான் 3க்கு : நீங்க 32,௦௦௦ ரூபாய்க்கு பொருள் மோதல வாங்கிட்டு அதுக்கப்பாறோ நீங்க ஒருத்தர சேர்த்துவிட்ட போதும்., அவரு வாங்குறத பொருத்து உங்களுக்கு கமிசன்..,

பணதொட சேர்த்து உங்க டாகுமென்ட்ஸ் pdf உம் ஷேர் பண்ணுங்க., மீதி விஷயத்த நாளிக்கி பேசலாம்.


JUDGE: சூப்பர் ப்ரோ இந்த நம்பர் தான உங்க வாட்சப் நம்பர் இதுல என்னோட அமௌன்ட் டாகுமென்ட் எல்லாம் அனுப்பிடலாமா 


அசோக்(சந்தோஷமாய்) : ஓகே ப்ரோ இதுலேயே அனுப்புங்க 


JUDGE: ப்ரோ உங்க நம்பர்க்கு மெயில் லிங்க் அனுபிற்க அதுல என் டாகுமென்ட் இருக்கு டவுன்லோட் பண்ணிகோங்க பணம் அனுபிற்றுக  


அசோக்: “ ஓகே ப்ரோ ” என்று கூறி அந்த லின்க்கை கிளிக் செய்தான் .., அதில் password கேட்டது ., “ப்ரோ password கேக்குது”      


அசோக்கை பற்றி JUDGE விவரிக்க தொடங்கினான் ...


JUDGE: முழு பேர்: அசோக் குமார் ., பொறந்த ஊர்: காஞ்சிபுரத்துல ஒரு கவேர்மென்ட் ஹாஸ்பிடல்., அப்பா இல்ல அம்மா நெசவு தொழிலாலி..,தாத்தா வீட்ல தா உன் மொத்த வாழ்க்கையும்.., இதலா தாண்டி உன்னோட வாழ்க்கைல ஹைலைட்டான விஷயம் என்னனா நீ ஒரு பயங்கரமான பேச்சாளர். ஸ்கூல்ல கிட்டத்தட்ட எல்லா வருஷமும் உனக்குதான் பேச்சுபோட்டில “First prize”. நீ சொல்ற விஷயம் தப்பவே இருந்தாலும் உன்னோட confident அனா speech நாள எல்லாரையும் மயக்குற அளவுக்கு செம்ம பேச்சு தெறம ஆனா அதே தெறம உன்னோட படிப்புல இல்ல ...ஊர்லயே டிப்பலோமா வரைக்கும் எப்படியோ படிச்சிட்டு நண்பனோட உதவில  சென்னைல AI  கம்பெனில மூணு மாசம் வேண்டாவெறுப்பா வேலைபாத்துட்டு இருந்த அங்க கூட வேலை செய்றவன் வழிய வந்ததுதா இந்த Easy Business .அப்ப  வேகமா பணம் சம்பாரிக்கணும் இருந்த ஆசைல கைல இருக்குற காசெல்லா கட்டி இந்த தொழில ஆரமிச்ச...ஊர்ல ஒருத்தன விடாம எல்லார்கிட்டயு இந்த பிசினஸ் பத்தி பேசுன....நறைய இடம் நயாபேயா அலைஞ்ச ஆனா ஒருத்தனும் உன் பேச்ச நம்பல...ஒரு கட்டத்துக்கு மேல நீ ஏமாத்தபட்டதையு புரிஞ்சிகிட்ட அதோட நீ இந்த தொழில நிறுத்திருக்கலாம் ஆனா நீ அதுக்கப்பரமாத இன்னு பயங்கரமா வேல செய்ய ஆரமிச்ச...இந்த தடவ உன்னோட பேச்சு திறமைய பயன்படுத்திகிட்ட ... உன்னோட பேச்சுல சில பொய்களையும் சொல்ல ஆரமிச்ச அதோட விளைவு பல பேர் உனக்கு கீழ இந்த பிசினஸ்ல சேந்தாங்க..உன் பேச்ச எல்லாரு நம்பாரமிச்சங்க...உன்ன கொண்டாடுனாங்க...அனா உனக்கு மட்டுமதா தெரியும் நீ பிசினஸ்ச விக்கலா அதோட பொய்களையும் வித்துக்கிட்டுயிருந்த. இப்ப அந்த பொய்களோட மதிப்பு கிட்டத்தட்ட பத்து லட்சம் உன்னோட பேங்க் அக்கவுன்ட்ல அண்ட் இப்பவரைக்கும் 4128 பேர் உன்ன fbல follow பண்றாங்க...What an inspiring journey you have…Mr. Golden star. என JUDGE சிரித்துகொன்டே அசோகின் புராணத்தை முடித்தான் ... 


அசோக் பயத்தில் நடுங்கி போய் உட்காந்திருந்தான். அதிர்ச்சியில் ஸ்தம்பித்து இருந்த அவனுக்கு பயத்தில் மூச்சி திணறியது. அசோக்கை பற்றி அவனால் கூட இவ்வளவு தெளிவாக கூறி இருக்க முடியாது ...தவறாக பேசினால் பணத்தை எடுத்து விடுவானோ என்ற பயத்திலும் இவன் யார் என்ற குழப்பத்திலும் பேசமுடியாமல் அமைதியாக உட்கதிருந்தான். மீண்டும் JUDGE பேச தொடங்கினான்.


JUDGE: என்ன அசோக் ரொம்ப அமைதியா இருக்க ...எப்டி உன்னபத்தி நா சொன்னதுலாம் கரெக்டா..?


அசோக் பதில் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான்.


JUDGE: ஓஹ் அப்ப நீ எதுவும் பேச மாட்ட...உன்ன எப்படி பேச வெக்கணும்னு என்னக்கு தெரியும் என சிரித்தான்.


மீண்டும் அசோக்கிற்கு ஒரு மெசேஜ் அதில் மீண்டும் ஒரு லட்சம் எடுக்கபட்டிருந்தது.


அசோக்(கோவத்தில்): டேய் ...உனக்கு என்னதாண்ட வேணும் ...எதுக்கு டா என்ன இப்டி டார்ச்சர் பண்ணுற...நா உனக்கு என்னடா பண்ண என கதறினான்.


JUDGE: என்ன அசோக் கோவப்படுரிய என்ன...? 


அசோக் : இல்ல இல்ல....நா நா நா ஏதும் கோவப்படல...அதலா எதுவு இல்ல என முச்சிரைக்க பதறினான்.


JUDGE : ஓகே ஓகே கூல்டவுன் அசோக்...உன்ன பொறுமையா புத்திசாலித்தனமா பேச சொன்ன....அமைதியா இருக்க சொல்லல....நீ பேசிகிட்டே இருக்கனும்...நா உன் பேச்சு திறமைய முழுசா பாக்கணும்..சோ டாக் ...


அசோக் (அமைதியாக) : எனக்கு ஒரு நிமிஷம் டைம் கொடு ...நா கொஞ்சம் யோசிக்கணும்...


JUDGE : No problem...கண்டிப்பா நீ யோசிக்கணும்...ஆனா நீ கேட்ட மாதிரி one minute தா டைம் ...இல்ல one minuteக்கு அடுத்த செகண்ட் அடுத்து ஒரு மெசேஜ் வரும் பாத்துக்க என சிரித்தான்.


அசோக் கண்களை தொடைத்துகொண்டான்...பதற்றத்தில் இதயத்துடிபினால் காதுகள் அடைக்க முச்சை இழுத்துக்கொண்டு சற்று தன்னை ஆசுவாசபடுதிகொண்டு யோசித்தான்...நேரமும் ஓடிக்கொண்டே ஒரு நிமிடத்தை நெருங்கி கொண்டிருந்தது. அந்த ஒரு நிமிடம் முடிவதற்குள் அசோக் பேசதொடங்கினான்.


அசோக்: என்ன பத்தி உனக்கு எல்லாமே தெரிஞ்சிற்கு... நா எங்க பொறந்த.. என்ன படிச்ச... என்ன செஞ்ச... எப்படி பேசுவ...என்னப்பத்தி  எல்லாமே உன்னக்கு தெரிஞ்சிருக்கு..ஹ்ம்ம் ...எனக்கு நீ யாரு என்ன எதுவுமே தெரியல ஆனா உன்னோட நோக்கம் என்னோட பணத்த மட்டும் எடுக்குறது இல்ல ...அதுதா உனக்கு தேவைனா நீ அத எப்பவோ மொத்தமா எடுத்துருப்ப... என்கிட்ட நீ இவ்ளோ நேரம் பேசிர்க்கனும்னு எந்த அவசியமும் இல்ல... உனக்கு என்னால ஏதோ ஒரு காரியம் நடக்கணும் ... அதுக்காகதா என்ன இப்டி டார்ச்சர் பண்ற .... சொல்லு உனக்கு என்ன வேணும்.... நான் என்ன பண்ணணு சொல்லு....


இதை கேட்ட JUDGE பயங்கரமாக சிரித்தான் ... அவனால் சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் இரும்பிகொன்டே சிரித்தான்...அவன் சிரிப்பால் எரிச்சலடைந்த அசோக் : போதும்...heh சொல்லு உனக்கு என்ன வேணும் என மீண்டும் கேட்டான் 


JUDGE: சான்ஸ்சே இல்ல அசோக் ... ஒரு நிமிஷத்துல இவ்ளோ யோசிச்சிட்ட ...how smart...anyway you are right...i need you...no i Want you


அசோக்: சொல்லு ..!


JUDGE : நம்ம ரொம்ப நேரமா சீரியஸா பேசிட்டு இருக்கோம்ல ... ஒருமாரி டென்ஷன்னா... கத்திகிட்டு திட்டிக்கிட்டு...பேசவே கடுப்பா இருக்கு...என்ன பண்னலா ...ஹ்ம்ம்ம்ம்... ஒன்னு பண்னலா lets play a game....கொஞ்ச நேரம் ஜாலியா ...என்ன சொல்ற ?     


அசோக் மௌனமாய் இருக்க விரும்பாமல் “சொல்லு’ என கூறினான் ..


JUDGE : alright then .... lets play....எனக்கு ஒரு game தெரியும்...அந்த game ஓட பெயரு Passah failaah...எனக்கு ரொம்ப பிடிச்ச game...உனக்கு விளையாட தெரியுமா ... தெரியலனாலு நீ விளையாடித்தா அகனும் வேற வழி இல்ல ...விளையாடலாமா 


JUDGE: ஓகே ...இந்த game oda rule ரொம்ப simple - நா சொல்லுறத கரெக்ட்டா செஞ்ச pass செய்யலான fail .... அவ்ளோதா...


அசோக்(கடுப்பாக): நீ சொல்றத தா செய்யனும்ன நேரடியா சொல்லு...எதுக்கு gameன்னு சொல்லி சுத்திவளைக்கிற


JUDGE: no அசோக் இது game தா ... dont worry ... இந்த gameல நீ pass ஆனா உனக்கு Prize கிடைக்கும் ..அதுவே நீ fail ஆனா எப்பயும் போல மெசேஜ் வரும் அவ்ளோதா...ஓகே நம்ம gameah start பண்னலா....game oda first stage....நீ ஒரு கேள்விக்கு பதில் சொல்லன்னு ...


அசோக்: சொல்லு



JUDGE: இப்போ உனக்கு உடம்பு சரியில்லன்னு ஒரு மெடிக்கல் ஷாப்ல மருந்து வாங்க போற...கடக்காரன்கிட்ட உன்னோட பிரச்சனைய சொல்லி மருந்து கேக்குற அதுக்கு அவனும் ஒரு மருந்து தரான் ....நீயும் அவன நம்பி அந்த மருந்த சாப்பிட்ற...ஆனா அதுக்கு அப்பரோ உன் உடம்பு இன்னும் மோசமாகுது....இந்த வாட்டி நேர டாக்டர் கிட்ட உன் பிரச்சனைய சொல்ற..அவன் மெடிக்கல் ஷாப்ல கொடுத்த மருந்த பாத்து இது தப்பான மருந்து ...இத யார் கொடுத்தா...இதுனாலதா பிரச்சனையேன்னு சொல்லி அவனும் ஒரு மருந்த கொடுத்து காச வாங்கி அனுபிட்ரா...நீயும் கடுப்பாகி அந்த மெடிக்கல் கடக்காரன் கிட்ட கோவமா கேள்வி கேக்குற....அதுக்கு அவனும் திமுரா பதில் சொல்றா ....அதே நேரம் வேற ஒருத்த அவன்கிட்ட மருந்து வாங்க வரான்...இப்போ நீ என்ன பண்ணுவ ????


அசோக்: கண்டிப்பா அவன சும்மா விட மாட்ட....அங்க இருக்குறவங்களுக்கு இவ ஏமாத்துரானு சொல்லி பிரச்சன பண்ணுவ...அவன் மேல கேஸ் போடுவ....


JUDGE: உண்மையா நீ அப்டி பண்ணுவியா ? உனக்கு அவ்ளோ தைரியம் இருக்கா?


அசோக் (கோவமாக): டேய், நா எதுக்கு டா பயப்படனு...நா சண்ட போடுவண்டா...


JUDGE: அப்ரோ பேச்சு மாற மாட்டியே? 


அசோக்(குழப்பத்துடன்): மாட்டன்....இப்போ எதுக்காக இப்டி கேக்குற ?


JUDGE: congrats அசோக்....நீ gameoda first roundla pass ஆகிட்ட...உன்னோட prize மெசேஜ் ah வந்துருக்கும்...செக் பண்ணி பாரு என கூற அசோக்கிற்கு மெசேஜ் வந்தது அதில் 1 லட்சம் ருபாய் அவனுக்கு வந்திருந்தது...அதை பார்த்த அசோக் அதிர்ச்சியுடன் குழம்பினான்...



JUDGE: ஓகே அசோக்...இப்போ நம்ம gameoda second roundக்கு வந்துருக்கோ...இந்த round கொஞ்சோ practicalah இருக்கும்....நீ போன roundல சொன்ன பதில் தா இந்த round ல நீ விளையாடப்போற...அதாவது உன்ன ஏமாத்துனவன கேள்வி கேக்க போற...


அசோக் : என்ன சொல்ற....என்ன யாரு ஏமாத்துன நா யார கேள்வி கேக்கணும்...


JUDGE: உன்ன யாரு ஏமாத்துனா...நா யார கேள்வி கேக்கணும்....hmmm....என்னமாறி வாழ்கை வாழுறோம்னே தெரியாம வாழ்துற்றுக்க....சரி அதையும் விளக்குற....நீ உடம்பு சரியில்லன்னு ஒரு தப்பான மருந்து வாங்குனியே அதுதா உன் கம்பெனி productuh....நீதா அந்த நோயாளி ....உனக்கு மருந்து கொடுத்தான் பார் அவன்தா உன்ன இந்த பிசினஸ்ல refer பண்ணவ...என்ன இங்க ஒரு சின்ன வித்யாசம் உனக்கு காசு கிடைக்கிதுன்னு நீயும் உன்ன ஏமாத்துனவனோட சேந்து மத்தவனையும் ஏமாத்திட்டு இருக்க....இப்போ புரிஞ்சிதா...யார எதுக்கு கேள்வி கேக்குரோம்னு....


அசோக்; டேய் என்ன சொல்ற....அவன் எதுவும் என்ன ஏமாத்தல...நானு யாரையும் ஏமாத்தல....


JUDGE : அத அவன்கிட்ட நீ பேசிக்கோ...இப்போ அவனோட call connect பண்ற....remember அவனோட என்ன பேசணுமோ அத மட்டும்த பேசணும்...இங்க நம்ம பேசிகிறது ஏதாவது சின்னதா அவனுக்கு சொன்னாலோ இல்ல அவன்கூட பேசுற call cut ஆனாலோ உனக்கு ஒரேஒரு மெசேஜ் வரும்....அது என்னனு நா சொல்ல தேவையில்ல...so round 2 starts now என்று கூற ராஜ் போணை எடுத்தான்...


ராஜ் : சொல்லு அசோக்...என்ன திடீர்னு call பண்ணிற்க ?


அசோக் : ஹலோ ராஜ்....அது ஒண்ணுமில்ல ஜி ....எப்டி இருக்கீங்க ?(என்ன பேசுவது என்று புரியாமல் தெனறினான்.)


ராஜ்: என்ன அசோக் ஒருமாரி பேசிட்டு இருக்க ?


அசோக்: ஒண்ணுமில்ல ஜி ! சும்மாதான்


ராஜ் {நக்கலாக}: எது சும்மாவா ! எவ்ளோ பெரிய ஸ்டார் நீங்க... அடுத்த டார்கெட்டு கோல்ன்னு ஒரே பிஸியா இருப்பிங்க....எனக்கு சும்மா call பன்னிருகிங்கலா....நம்பமுடியலையே...


அசோக்(கடுப்புடன்): அதுலாம் ஒண்ணுமில்ல ஜி ...சும்மா பேசனும்னுதா call பண்ண 

ராஜ்: சரி சும்மா பேசலாம் ... என்ன விஷயம் சொல்லுங்க ?


அசோக் :ஒண்ணுமில்ல ஜி, ஒரு சின்ன டவுட்டு.... நம்ம product பத்தி வெளிய சில பேரு தப்பா பேசிகிறாங்க...நம்ம விக்கிற மருந்து சரி இல்லன்னு சொல்லிகிறாங்க....அத பத்தி உங்களுக்கு எதாவது தெரியுமா ? (என்று பேசிகொண்டிருக்கும் போதே ஒரு புத்தகத்தை எடுத்து அதில் உள்ள பக்கங்களை திருப்பி ஏதோ ஒன்றை தேடிகொண்டிருந்தான் )


ராஜ் : (பயங்கரமாக சிரித்தான்) ஏன் ஜி...நம்ம விக்கிறது பத்தி கூட தெரியாமையா வித்துக்கிட்டு இருக்கீங்க...


அசோக்(வெறுப்புடன்): இல்ல ஜி...தெரிஞ்சிக்கிலாம்ன்னு தான்...நம்ம மருந்த பத்தி கொஞ்சோ சொல்லுங்க...உண்மையாலே நம்ம விக்கிற மருந்து நல்லது தானா ?


ராஜ்: உனக்கு என்ன ஆச்சி அசோக்...அதா இந்த ஸ்டார் ஆனாலே இதா பிரச்சன....திடீர்னு நியானம் வந்து உலகத்தையே காப்பாத்த போரமாரி பேசுவாங்க...இத்தன நாள்லா விக்கும்போது உனக்கு இது நல்ல மருந்தா தோனலியா...இப்போ என்ன ஆச்சி திடீர்னு ?


அசோக்(கடுப்புடன்); ஜி ப்ளீஸ்...நம்ம மருந்த பத்தி உண்மைய சொல்லுங்க


ராஜ் : என்னடா சொல்லன்னு உனக்கு, தூங்கபோற நேரத்துல வந்துட்டு வாக்குமூலம் கேட்டுற்றுக்க....அதுலா நல்ல மருந்து தா...போ போய் தூங்குற வேலைய பாரு 


அசோக்; அது நல்ல மருந்துன்னு உங்களுக்கு எப்படி தெரியும்....நீங்க use பண்ணிட்டு இருக்கீங்களா...


ராஜ்(கோவத்துடன்) : தா உனக்கு என்னடா வேணும்? ...இப்போ அது நல்ல மருந்தானு தெரிஞ்சிகிட்டு என்ன கிழிக்கப்போற ? 


அசோக்(கோவத்துடன்): எனக்கு நீதா இந்த பிசினஸ்ஸ introduce பண்ண....உன்ன நம்பிதா நானும் இந்த பிசினஸ்ல சேர்ந்த...நீதா எனக்கு பதில் சொல்லணும்...சொல்லு நம்ம மருந்து நல்லதா கேட்டதா ?


ராஜ்(சத்தமாய் கத்தினான்); தா அது கேவலமான மருந்து டா போதுமா! நிறைய பேர் அந்த மருந்தல ஏகப்பட்ட side-effect வருதுனு சொல்லித அவன் விளம்பரமே நம்மள வெச்சி பண்றான்.... தெரிஞ்சிக்கிட்டியா.....என்ன இப்ப என்ன பண்ண போற...போய் கேஸ் போடா போறியா போடு போ...அவன் மேல ஏற்கனவே வெளிநாட்டுல ஏகப்பட்ட கேஸ் இருக்கு...அவனலா ஒன்னு பண்ண முடியாது...


அசோக்: அப்போ நீ என்ன ஏமாத்தி இருக்க... உன்ன நம்பி தான நா இந்த மருந்த எல்லார்கிட்டயும் வித்துற்றுக்க ? எதுனால இப்டி பண்ண ?


ராஜ்(நக்கலாக சிரித்தான்) ; ஏய்....எது என்ன நம்பிதா இந்த businessla சேர்ந்தியா....நா யாரு உனக்கு நீ என்ன நம்பி சேருரதுக்கு...நீ என்கூட வேலைபாத்த அவ்ளோதா...திடீர்ன்னு ரொம்ப நல்லவன் மாறி பேசிற்றுக்க...நீ உண்மையலையே இந்த மருந்த வாங்கவா வந்த....நா சம்பாரிக்கிறதயும் நா வெச்சிற்க பொருளையும் தான பாத்த.. இந்த பிசினஸ்ல சேர்ந்த நானு உங்கள மாறி சம்பாரிக்க முடியுமானுதன மொத நீ கேள்வியே கேட்ட..,நீ இந்த மருந்த விக்கும்போதும் கடன்ல வாங்கி தான Highclass bike phonenu வாங்கி என்னமோ இந்த businessla சம்பாரிச்சமாரிதானடா எல்லார்கிட்டயும் பொய்சொல்லி இத வித்த...அப்போலா உனக்கு இந்த மருந்த பத்தி கண்ணுக்கு தெரியலையா...தோ பார் யாரு என்னைய நம்பி ஒன்னு சேரல உன்னைய நம்பியு சேரல...எல்லாருக்கும் சீக்கிரம் பணம் சம்பாரிக்கணும் ஆசை அதுனால சேர்ந்தாங்க...நம்மாலும் பணம் சம்பாரிகிறோம் இன்னுமும் சம்பாரிக்கபோறோம்...இனிமே நீ கஷ்டப்பட்டு பேசி எல்லார்கிட்டயும் விக்ககூட வேணாம் நீ வாங்குன award வெச்சே எல்லாரும் உன்கிட்ட product வாங்கிருவாங்க...நீயும் இன்னு நல்லா காசு பாத்து செட்டில் ஆகிடலா...சும்மா லூசு மாறி கேள்வி கேக்காம போய் தூங்கு போ...


JUDGE: அப்போ எல்லாம் தெரிஞ்சி தா எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்கீங்க 


ராஜ்(குழப்பத்துடன்): நீ யாருடா நடுவுல....அங்க என்ன நடக்குது அசோக்?


JUDGE: நா கேட்டதுக்கு மொதலா பதில் சொல்லுடா...


ராஜ்(கோவத்துடன்): நீ யாருடா என்ன கேள்வி கேக்குறதுக்கு....நா எதுக்கு டா உனக்கு பதில் சொல்லணும்


JUDGE: அதுவும் சரிதான்....நீ எதுக்கு எனக்கு பதில் சொல்லணும்...நீ மக்களுக்கு தா பதில் சொல்லணும்


ராஜ்(குழப்பத்துடன்): தா யார நீங்க? நா என்னத்த மக்களுக்கு சொல்லணும்?


JUDGE : கெட்ட வார்த்தைகள் பேசவேணாம் ராஜ்...என நீங்க பேசுனத இந்த உலகமே கேட்டுட்டு இருக்கு..


ராஜ் : என்னடா ஒளருற?


JUDGE : நம்பிக்கை இல்லன....உன்னோட phonela கொஞ்சோ fb on பண்ணி பாரு...அதுல லைவ் ஆடியோ ஒன்னு உன்னோட accountல  ஓடிற்றுகும்....அது அசோக் accountlaiyum லைவ்ல தா இருக்கும்...அதுமட்டுமில்ல நம்மளோட தொகுதியோட IAS, IPS, MLAல இருந்து councilor, VA வரைக்கும் அவங்களோட official pageslaiyum உங்க speech தா liveah ஓடிக்கிட்டு இருக்கு...நாளைக்கி நியூஸ் channels laiyum hot topic உங்க speech தா ராஜ்.

இவ்வாறு JUDGE கூற ராஜ் phonai cut செய்தான். அசோக் என்ன நடந்தது என்று புரியாமல் உருக்குலைந்து காதில் phone வைத்தவாறு உட்காந்திருந்தான்.


JUDGE: அப்ரோ அசோக் நாளிக்கி நீயும் உன் நண்பர் ஜியும் செம்ம famous ஆக போறீங்க..., வேற lvl தா 


அசோக்: கண்டிப்பா வேற level தா ....கூட நீயும் நல்லா famous ஆகிடுவ நிர்மல் என்று லைவ்வில் கூறினான். 


JUDGE : நிர்மல் ஆஹ்....என்ன சொல்ற அசோக் 


அசோக்: போதும் நிர்மல்....நீதான் இத பண்றனு எனக்கு நல்லா தெரியும்...


JUDGE : நான்தா நிர்மல்ன்னு எப்டி சொல்ற அசோக்


அசோக்: என்கிட்ட பிசினஸ் பண்றவங்கள நா ஒரு நோட்ல எப்பயும் எழுதி வெச்சிற்ப....அதுல இருக்குறவங்க எல்லாரும் இப்போ எப்டி இருகாங்கன்னு எனக்கு நல்லா தெரியும்...உன் ஒருத்தன தவற...உன்னோட intention என்ன பழிவாங்கணும்ன்னுதா நீ இப்டி பண்ணிற்க


JUDGE (சிரித்தவாறு): you are too smart அசோக் அதே சமையம் உன்னமாரி ஒரு மழுமட்டியாயும் நா பாத்ததில்ல...


அசோக்: என்ன சொல்ற நிர்மல் ?


அப்போது லைவ் cut ஆனது.., இப்போது JUDGE பேச தொடங்கினான்


JUDGE: நீ சொன்ன மாறி நாளிக்கி என்ன யாருன்னு போலீஸ் தேடுனாங்கன கண்டிப்பா அது நிர்மல் oda dataவதா காட்டும்...இப்போ நீ livela கடைசியா அந்த பேர வேற சொல்லிட்ட....அது எனக்கு இன்னு வசதியா போச்சி...அனா நீ போற்றுக இந்த effortகாக உன்கிட்ட மட்டும் இந்த உண்மைய சொல்ற....நா நிர்மல் இல்ல....இவ்ளோ என் நிர்மல் ah தேடுனாலும் அவனும் இந்த உலகத்துல இப்போ இல்ல....என அவன் ஏறந்துடான்...he is no more....


அசோக்: அப்போ நீ நிர்மல் இல்லன உண்மையாலே நீ யாரு?....நிர்மல் எப்டி இறந்தான்? அவனுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் ?....நீ எதுக்காக என்ன பயன்படுத்திகிட்ட? 


JUDGE; ஐயோ பொறுமை அசோக் ...இப்போ நீ கவலை பட வேண்டியது உன்னபத்தி மட்டும்தான். எனக்கும் நிர்மல்க்கும் எந்த சமந்தமும் இல்ல ஒரேஒரு ஒற்றுமை தா .... நாங்க ரெண்டுபெரும் இந்த scams ஆள பாதிக்க பற்றுந்தோம்....நிர்மல் பாவம் அவனால இந்த scams ah எதிர்க்க முடியல அதோட அவன் கடனும் அதிகமானதுனால அந்த கஷ்டத்த தாங்கிக்க முடியாம தற்கொலை பண்ணிகிட்டான்....அனா நா அப்டி இல்ல....நா இந்த scams ah எதிர்க்கணும்னு முடிவு பண்ண...என என்னகுன்னு இந்த உலகத்துல இப்போ எந்த அடையாளமும் இல்ல, கடவுள் எப்போ உங்கள தண்டிபான்னு தெரியல, சட்டமும் உங்கள கண்டுக்கல அதான் அந்த பொறுப்ப நானே எடுத்துகிட்ட ....Now I’m THE JUDGE....இப்போத்துல இருந்து என்னோட judgement ah அரமிக்கப்போற.…


அசோக்: எனக்கு புரியல, என்ன தண்டிச்ச எல்லாமே மாறிருமா! உனக்கு இந்த scam ah தடுக்கனும்னா இந்த கம்பெனி owner ah மிரட்டவேண்டிதான, எதுக்காக என்ன தேர்தெடுத்த!


Jugde: நீ உன்னோட vote க்கு பணம் வாங்கிருக்கியா அசோக்?


அசோக்: நா கேக்குறதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?


Judge: இருக்கு அசோக்! என்னோட கேள்வி இதுதா! ஒரு அரசியல்வாதி தான் நிக்கிற தொகுதில ஜெயக்கனும்னு அங்க இருக்குற மக்கள் எல்லாருக்கும் பணம் தரான், மக்களும் அத வங்கிகிறாங்க, ஏன்டா பணம் வாங்குரிங்கனு கேள்வி கேட்ட இவன் கிட்ட பணத்த வாங்கிப்போம் நமக்கு யாரு பிடிக்குமோ அவனுக்கு vote பண்ணுவோம்ன்னு சொல்றாங்க, ஆனா அங்க இப்போ அந்த பணம் கொடுத்த அரசியல்வாதி ஜெய்ச்சிட்ரா, போட்ட காச எடுக்க நூறு மடங்கு ஊழல் பண்றான், எதிர்த்து கேள்வி கேட்ட அதான் காசு வாங்குனலன்னு தைரியமா பேசுறான்., இப்போ இங்க யாரு மேல தப்பு அசோக், அந்த அரசியல்வாதி மேலயா இல்ல அந்த மக்கள் மேலயா, இங்க யாருக்கு தண்டன கொடுக்கணும்


அசோக்: வெறுப்புடன் மக்கள் மேல தா


Judge: good, ஒருவேள மக்கள் யாரு காசு வாங்காம இருந்திருந்தா அந்த அரசியல்வாதியும் பயத்துல நல்லது பண்ணிருப்பான் இல்லன தப்ப யாருக்கும் தெரியாம பண்ணுவான் மொத்ததுல அவனோட ஒரு ஒரு செயலுளையும் ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கும், அதுதா democracy ஓட பவர் அசோக், அந்த கம்பெனியோ இல்ல அதோட ஒனரையோ தண்டிச்ச இன்னு ஒருத்த திரும்ப வர போற அதுவே நீங்க திருந்திட்ட இந்த சைக்கிள் இங்கயே ஒடஞ்சிடும் பாரு, அதுக்குதா உன்ன செலக்ட் பண்ண golden star, சண்ட போடு கேள்வி கேளு இதுதா என்னோட தீர்ப்பு!


அசோக்: தலையில் கை வைத்து உட்கார்ந்தான்



Judge: and one more thing உனக்கு ஒரு மெசேஜ் வந்துற்கும் பாரு ....


அசோக் அவன் மெசேஜ் பார்த்தான்....அதில் அவன் பணம் மொத்தமும் எடுக்கப்பட்டிருந்தது.…


JUDGE : இது நிர்மல்க்காக...என்று சொல்ல phone cut ஆனது...


அசோக் கண் கலங்கி அசைவற்று உட்கார்திருந்தான்...அப்போது current வந்தது.., அதில் சிவாஜி படம் கிளைமாக்ஸ் காட்சி ஓடிகொண்டிருந்தது...அதில் இறந்த வில்லனின் தலையில் ஒரு ருபாய் வீசி எறிந்த ரஜினி “போகும் போது இத கூட உன்னால கொண்டு போக முடியாது” என்று கூற அது அசோக்கிற்கு சொன்னது போல் இருந்தது.


JUDGE  ஓட judgement தொடரும்...... 

  

By Vinodh Kumar R




2 views0 comments

Recent Posts

See All

Two Strangers

By Ananya Anindita Jena The orange hue replaced the azure sky as the sun began to set. The waves roared loudly declaring the sea and the...

The Puzzle Pieces

By Aanya Sharma Pain. The sound of my best friend’s body hitting the ground next to me. Is there anything better to pass out to? *****...

The Identity Thief

By Aanya Sharma As the river of blood pooled out of Alex Smith’s body, the new Alex Smith walked expressionlessly away from the corpse,...

Comments


bottom of page