By Rameez
[ ஏழு வருடங்களுக்கு முன் இறந்து போன தன் அப்பாவுடன் மீண்டும் ‘ஒரே ஒரு நாள்’ இந்த உலகில் வாழ தன் அன்பு மகனுக்கு ஒரு வாய்ப்பை இறைவன் வரமாக கொடுக்கிறார்..! அனால்.. அவர் வருவது மகனுக்கு தவிர யாருக்கும் தெரியக்கூடாது என்பது இறைவனின் கட்டளை ! ]
நாளைக்கு அப்பா அந்த பழைய வீட்டுக்கு வராரு இன்னிக்கு இரவு.. மனசுல கடைசியாக அப்பா கிட்ட பேசினதும், அப்பா இந்த உலகை விட்டு பிரிந்து போன கடைசி நாள்.. அன்று மாரடைப்பால் அவர் இதயம் நின்று போக.. அவரின் கண்கள் தன் மகனையே பார்த்தபடி நின்றது.. நினைவுக்கு வந்து.. கண் கலங்குகிறான்.. அந்த பழைய வீட்டில் இரவிலிருந்து அப்பாவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறான் மகன் ரமேஷ் !
காலை விடிந்தது.. அப்பா ஓட நம்பரிலிருந்து ரமேஷ் மொபைலுக்கு கால் வருது.. “டேட் காலிங்..
ரமேஷ் போனை எடுக்க.. அதே அந்த அன்பான அப்பாவின் குரல் கேட்டது..
நான் வெளிய தான் நிக்குறேன் கதவ திற ரமேஷ்..
ரமேஷ் சட்டென எழுந்து கதவை திறந்தான்.. எதிரே தன் அப்பா நின்றிருந்தார்.. ஒரு சைடு பேக் உடன்.., சில நிமிஷங்கள் அவரையே பார்த்துக்கொண்டிருக்க, அவர் ரொம்ப ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருந்ததை ரமேஷ் பார்த்து மகிழ்ச்சியாகிறான்..!
அவரோட கையை பிடிச்சி உள்ளே வாங்கப்பா ன்னு சொல்லறான்..
அவர் உள்ளே வந்து உட்க்கார்தாரு.. பூனை குட்டிகள் ஓடிவந்து அவர் மடியில் ஏற.. அவர் அந்த பூனை குட்டிகளை தடவி கொஞ்சினார்..
என்ன பா வீட்ல யாருமே இல்ல..
எல்லாரும் போய்ட்டாங்கப்பா.. நீங்க சொல்லிகிட்டே இருந்தீங்க உன்ன சுத்தி இருக்குறவங்க ரொம்ப சுயநலமா இருக்காங்க.. பார்த்து இருன்னு நான் தான் கேக்கல.. என்னால ஆக வேண்டிய காரியங்கள் ஆனதும் என்ன மறந்துட்டாங்க... ப்பா
அத கேட்டு அப்பா அப்செட் ஆனார்..
சரி விடுங்கப்பா.. போகட்டும்., இன்னிக்கு ரொம்ப ஸ்பெஷல்.. உங்களுக்காக என் கையாலயே சிக்கன் கொழம்பு செய்யுறேன்.. நீங்க சாப்டனும்
சிறிது நேரம் கழித்து சாப்பாடு தயார் ஆனது..
அப்பா நல்லா ரசிச்சு ருசிச்சு.. சிக்கன் கிரேவி சாப்பிடுகிறார்..
வீட்ல டிவி ல பழைய பாடல்கள் போடுறான்.. ரமேஷ்
ரமேஷுக்கு சட்டென நினைவு வந்து இதற்க்கு முன் அவர் உயிருடன் இருக்கும்போது பழைய பாடல்களை சட்டென மாற்றிவிடுவதை.. அதை நினைத்து தனக்குள் கில்டி ஆக பீல் ஆனான்..
புதிய வானம்.. புதிய பூமி என பாடல் கேட்க்க..
ரமேஷ் தன் அப்பாவின் முகத்தில் அந்த ஆனந்த சிரிப்பை பல வருஷங்கள் கழிச்சு மறுபடியும் பார்க்கிறான்.. மகிழ்சியாகிறான்..
தன் இதயத்தோட துடிப்பு தனக்கு கேக்குது.. இந்த நாள் சீக்கிரம் முடிஞ்சிட கூடாதுன்னு.. வாட்ச்ச பார்க்குறான்
நீயும் கொஞ்சம் சப்பிடு ன்னு அப்பா ஊட்டிவிட.. லேசா கலங்கிய கண்களுடன் சாப்பிடுகிறான்..
சின்ன வயசுல அப்பா வேலைக்கு போகும்போது.. போக விடாம.. ரமேஷ் அடம்பிடிக்க.. தன் அம்மா ரமேஷ பிடிச்சி வெச்சிக்க.. தன் அப்பா வேகமாக வேலைக்கு கிளம்ப.. ரமேஷ் சிறிது நேரத்தில் கதவை திறந்து கொண்டு வேகமாக ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி தன் அப்பாவின் BAG ஐ பிடிச்சு இழுப்பான்.. தன் அப்பா திரும்ப வீட்டுக்கே வந்துடுவார்..
அதை நினைத்து கண்கலகினான் ரமேஷ்..,
மனிச்சிடுங்கப்பா நா ஒரு நாள் உங்கள கோவத்துல கத்திட்டேன்.. அன்னிக்கு அம்மா ஹோஸ்பிடல் ல அட்மிட் ஆகி இருதப்போ.. நீங்க அம்மா கிட்ட அடிக்கடி கொவப்படுறதாலதான் இப்படி ஆச்சுன்னு உங்ககிட்ட ரொம்ப கடுமையா பேசிட்டேன்.. சாரி பா..
ச்சே.. அதெல்லாம் இன்னுமா நியாபகம் வெச்சிருக்க.. விடு பா..
அப்பா அந்த கைய காட்டுங்களேன்..
அப்பா இடது கையை நீட்டி.. என்னது ப்பா? ன்னு கேக்க..
ரமேஷ் ஒரு காஸ்ட்லி வாட்ச் ஐ எடுத்து கட்டுகிறான்..
அப்பா அதை பார்த்து மகிச்சியுடன் சிரிச்சு..
ரொம்ப சூப்பரா இருக்கு ப்பா.. அனா ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் போல இருக்கே.. எதுக்கப்பா.. இப்போ..
அதெல்லாம் இருக்கட்டும் ப்பா எங்க அப்பா க்காக ஆசையா வாங்குனது.. அது எவ்ளோ காஸ்ட்லியா இருந்தாலும் பரவால்ல.. ஒரு நிமிஷம் ப்பா.. ன்னு ரமேஷ் போனில் தன் அப்பாவுடன் சேர்ந்து சில செல்பீஸ் எடுக்கிறான்..!
அப்பா நீங்க ரொம்ப வருஷங்களா கேட்டுகிட்டு இருந்த அந்த விஷயத்த நான் செஞ்சிட்டேன்..
அப்டியா.. என்ன அது...?
இருங்க வரேன்..!
ரமேஷ் ஒரு பேக் செய்த போட்டோ ப்ரேமை கொண்டு வந்து பிரிச்சு காட்டுகிறான்.. அதில் அப்பா மகன் பின்னால் தாத்தா இருக்கிறார்.. அதை அப்பா வாங்கி பார்க்கிறார்..
ப்பா எவ்ளோ நாளா கேட்டுகிட்டு இருந்தேன்.. இப்போதான் பண்ணனும்ன்னு தோணுச்சா.. உனக்கு..
பையிலிருந்து.. சில போடோஸ் எதுக்கிறான் ரமேஷ்.. எல்லாம் சின்ன வயசு போடோஸ்..
அதை அப்பா பார்க்கிறார்..
ஹே.. பரவால்லியே.. இதெல்லாம் இன்னும் பாத்திரமா வெச்சிருக்க.., அதுல உங்க பாட்டி போட்டோவும் இருக்கு..
இந்த உலகத்துல உங்க பாட்டி போல நல்லவங்க யாரும் இருக்க முடியாது.. அவ்ளோ நல்லவங்க.. அன்பானவங்க.. ச்சே.. காலம் எவ்வளவு வேகமா போய்டுச்சு பார்த்தியா..?!
அமா ப்பா.. பாரிஸ் கார்னர் பஸ் டிப்போ கிட்ட போய் நின்னாலே உங்க நியாபகம் தான் வரும்., நாம அடிக்கடி போற இடம்.., அத்த வீட்டுக்கு அடிக்கடி போனது.., நா 10 வது எக்ஸாம் எழுத போகும்போது நீங்க பஸ் ஏத்தி விட்டது..ன்னு, எல்லா இடங்களுக்கும் நீங்கதான் என் கூட வந்து விட்டுட்டு போவீங்க.. மறக்கவே முடியாது ப்பா..
ஆமா பா.. இப்ப நெனைச்சாலும்.. எல்லாம் நேத்து நடந்த மாதிரியே இருக்கு..
சரிப்பா நீங்க போய் குளிச்சிட்டு வாங்க.. உங்களுக்கு புது டிரஸ் வாங்கி வெச்சிருக்கேன்.. நம்ம இப்போ படத்துக்கு போறோம்.. சத்யம் தியேட்டர்க்கு
அப்பா குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுக்கிட்டு வரார்.., ரமேஷ் பார்க்கிறான்
அப்பா சூப்பரா இருக்கீங்க சூப்பர்ஸ்டார் மாதிரியே.. இருக்கீங்க..
அப்பா மகிழ்ச்சியில் சிரிக்க..
சரி.. வா கிளம்பலாம்..
அப்பா உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைசும் இருக்கு.. வாங்க
வீட்டுக்கு பின்னால் புல்லட் வண்டி நிக்க.. அப்பா அதை பார்த்து ரொம்ப மகிழ்ச்சியாகிறார் !
ஓ.. புல்லட் வண்டியா.. சூப்பர் ப்பா.. ஒரு நொடி பார்த்து ரமேஷை கட்டி அனச்சிகிட்டு.. சொன்னாரு..
உன்ன சின்ன வயசுல என் பிரெண்ட்ஸ் பார்த்து சொல்லுவாங்க.. நீ உன் தாத்தா மாதிரி பெரிய ஆளா வருவேன்னு..
நம்ம குடும்பத்துல நிறைய சொந்தங்கள் சொத்த வித்து சாபிடுறது.., அடுத்தவன் உழைப்பை அபகரிச்சி சாபிடுறதுன்னு இருட்டாங்க..
நீ ஒருத்தன்தான் நினைச்ச விஷயத்துல சாதிச்சு காட்டுறதுல நம்பர் ஒன்’ ன்னு நிருபிச்சிடே.. ரமேஷ் ரொம்ப மகிழ்ச்சியுடன் வண்டி ஸ்டார்ட் பண்ண.. இருவரும் கிளம்ப..
ஆமா.. என்ன படம் பா போறோம்..
இந்தியன் 2 படம் வதுருக்குப்பா.. அதுக்குதான் போறோம்..
ஓ.. பார்ட் 2 வந்துருக்கா.. பரவால்லியே ப்பா.. நம்ம பழைய ஊர்ல இருக்கும்போது இந்தியன் படத்த ப்ளாக் ல டிக்கெட் வாங்கி பார்த்தோம் நியாபகம் இருக்கா..?
நியாபகம் இருக்கு ப்பா.. அப்புறம் நீங்க வேலை வேலை ன்னு பிஸி ஆயிடீங்க.. நாம்ம அதுக்கப்புறம் தியேட்டர் ல போய் எந்த படத்தையும் பார்க்கல.. அதான் இப்போ போறோம்..
கப்பலேறி போயாச்சு பாட்டோட பின்னணி இசை கேட்க்க.. இருவரும் தியேட்டரில் படம் பார்த்து பேசிக்குறாங்க மலரும் நினைவுகள்.. பற்றி..!
படம் முடிஞ்சு வெளிய வராங்க..
ரொம்ப சந்தோஷம் ப்பா.. திரும்பவும் இந்தியன் தாத்தா வா கமல்ஹாசனை பார்த்ததுல..! சென்னை எவ்வளவு மாறிடுச்சு.. ப்பா ?!
சரிப்பா நம்ம இப்போ இன்னொரு இடத்துக்கு போறோம்.., இருவரும் கிளம்பினார்கள்..
சென்னை புதுப்பேட்டையில் நாகேஷ் டைலர்ஸ் கடை முன் நிறுத்த.. கடை மூடி இருந்தது..
அப்பா அந்த கடையை பார்த்து பீல் பண்ணார்.., ம்ம்.. என்னப்பா.. நா வேலை பார்த்த கடைக்கு கூட்டிட்டு வந்துருக்க..
அப்பா அந்த டைலர் எப்பவோ கடையை நிறுத்திதான் ப்பா.. நா இந்த பக்கம் வரும்போதெல்லாம் எப்பவும் பூட்டியே இருக்கும்..
ச்சே.. ரொம்ப நல்ல மனுஷன் பா அந்தாளு.. என்னாச்சோ.. அவருக்கு..?!
வழியில குல்பி ஐஸ்க்காரன் வர.. ரமேஷ் வண்டியை நிறுத்தி.. இரண்டு குல்பி ஐஸ் வாங்குகிறான்.. அப்பாவின் மறைவிர்க்கு பிறகும் அவருக்கு பிடிக்கும் என ரமேஷ் அப்பாவின் சமாதிக்கு செல்லும்போதெல்லாம் அவர் சமாதியின் மீது ஒரு குல்பி ஐஸ் வைத்து வருவது நியாபகம் வந்தது..!
அப்பா இந்தாங்க உங்க பேவோரைடே குல்பி.. சாப்பிடுங்க..
இருவரும் குல்பி சாப்பிட்டார்கள்..!
வண்டியில் இருவரும் வீட்டுக்கு வந்து இறங்கினார்கள்.. ரமேஷ் டைம் பார்த்தான் இரவு 12 மணிக்கு இன்னும் சில மணி நேரங்களே இருந்தன..
உன் மனைவி குழந்த.. கிட்ட ஒரு வாட்டி பேசணும்ப்பா
ரமேஷ் ஒரு நொடி நொறுங்கி போனான் அதை கேட்டு..
ரமேஷ் தன் மனைவிக்கு கால் பண்ணி
அப்பா ஓட பிரண்ட் பேசுறாரு ன்னு சொல்ல.., அப்பா பேசுறார்..
எப்படி இருக்கீங்க மா..?
நல்லா இருக்கேன் அங்கிள் நீங்க எப்படி இருக்கீங்க..?
நல்ல இருக்கேன் மா.. ரமேஷ சந்தோஷமா பார்த்துக்கமா அவனுக்குன்னு யாருமே இல்ல.. நீதான்
சரிங்க அங்கிள்..
ஆ.. குழந்த கிட்ட கொஞ்சம் போனை குடுமா..
போன்ல குழந்தையோட வாய்ஸ் கேட்க்க.. அப்பா லேசாக கண் கலங்குகிறார்..
சரிமா வெச்சிடுறேன்..
என் பேர குழந்தைய என் கைல தொட்டு விளையாட முடியாம போச்சே ன்னு பீல் பண்ணார்..
பாழா போன இந்த ஸ்மோகிங் பழக்கம் எனக்கு இல்லன்ன.. நா உங்கள விட்டு இவ்ளோ சீக்கிரம் போய் இருக்க மாட்டேன்..!
சரிப்பான்னு போனை ரமேஷ் கையில் குடுக்க.. ரமேஷ் சோகத்தில் அமைதியானான்..
அம்மா கிட்ட பேசுறீங்களா பா.. போன் போடவா..
இல்லப்பா.. போதும்.. நா போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்.. ரொம்ப டயர்டா இருக்கு..!
சிறிது நேரம் உட்க்கார்ந்து.. அப்பா டிவி பார்க்க.. மணி 11:50 ஆனது
ரமேஷ் டயர்டாகி அசந்து தூங்குறத பார்த்து.., அவன் மீது பெட்ஷீட்டை போர்த்திவிட்டு அப்பா கிளம்புகிறார்..
அப்பா அந்த வீட்டை திரும்பி பார்த்துவிட்டு லேசாக கண்கலங்கி..
எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு நாள் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி கடவுளே.. சொல்லிட்டு நடக்க ஆரம்பித்தார்.. தெருவோட கடைசி முனை வரைக்கும் சென்றுவிட்டார்..!
தூரத்துலேந்து அப்பா..ன்னு ஒரு குரல் கேட்க்க..
அப்பா திரும்பி பார்த்தார்.. மகன் ஓடி வருகிறான்..!
அவன் கிட்ட வந்ததுமே தான் தெரியுது.., அவன் அழுதுக்கொண்டே ஓடி வருவது..!
என்னப்பா என்ன விட்டுட்டு அப்டியே போறீங்க.. ன்னு சொல்ல..
நீ ஏன்ப்பா இவ்ளோ தூரம் ஓடி வர.. நா போய்க்குறேனே..
இல்லப்பா நா உங்கள வழியனுப்ப உங்க கூட வரேன்.. ப்ளீஸ் பா.. ன்னு கெஞ்சுறான்..!
அப்பா போலியாக சிரிச்சு.. சரி வா போகலாம் ன்னு சொல்றார்..!
அப்பா மகனை கூட்டிட்டு ஒரு பாழடைந்த ரயில்வே ஸ்டேஷன் க்கு வந்தார்.. ரமேஷ் அந்த இடத்த பார்த்து முழித்தான்.. அந்த இடத்தை இப்பதான் பார்க்கிறான்..!
உள்ளே போய் சேர்ல பக்கத்துல பக்கத்துல உட்க்கார்ந்து இருக்காங்க.., அப்பா வரும்போது கொண்டுவந்த அவரோட ஒரு சைடு பேக்கை பிடிச்சிகிட்டு உட்க்கார்திருக்க.., ரமேஷ் அப்பாவை பார்க்கிறான்.. கலங்கிய கணங்களுடன்.. தொண்டை கனத்தது அழுகையை அடக்கிகொண்டான்..
அப்பா டைம் பார்க்கிறார்.. மணி 12:30 ஆயிடுச்சு.. ஒரு ட்ரைன் வந்து நிற்கிறது.. அதில் ஆட்களே இல்லை.. ட்ரைனின் மறு பக்கம் ஒரே இருட்டு.. விண்வெளி போல இருந்தது..,
அப்பா எழுந்து நிற்கிறார்.. மகனை பார்த்து..
எதுக்கும் கவலை படாதே ரமேஷ்.. நான் உன் கூடவே தான் இருக்கிறேன்.. ன்னு சொல்ல..
மகனின் கண்களில் கண்ணீர் கடலாக வழிய.. அதை அப்பா தன் கைகளால் துடைக்கிறார்..!
என் சிங்க குட்டி அழ கூடாது.., அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தா.. நானே உனக்கு அப்பாவாகவும்.. நீயே எனக்கு மகனாகவும்.. பொறக்கணும்..
நா கிளம்புறேன்.. ரமேஷ்.. ன்னு அப்பா கிளம்ப..
தன் மகன் அப்பாவின் பையை பிடித்து இழுத்து..
போகாதீங்க..ப்பா ன்னு அழுகை குரலில் சொல்ல..
தன் அப்பாவுக்கு தன் மகன் சிறு வயதில் இப்படி பேக்கை பிடிச்சு வேலைக்கு போக விடாமல் இழுத்தது நியாபகம் வர.. அப்பா கண்கலங்குகிறார்..
அமைதியாக.. தன் மகனின் கையை எடுத்துவிட்டு கிளம்பினார்.. ட்ரைன் ஏறினார்..!
ட்ரைன் மெல்ல புறப்பட்டது.. மகனின் கண்கள் கண்ணீரில் மிதந்தன.., தன் தந்தை ட்ரைனில் நின்றுகொண்டு மகனையே பார்த்துகொண்டிருந்தார்.. கண்ணீருடன்.., ட்ரைன் வெகு தூரம் சென்றது.. மகனுக்கு இந்த ஒரு நாள் முழுவதும் அப்பாவுடன் சந்தோஷமாக கழிந்தது.. சில வினாடிகள் கண்முன் வந்துபோக.., கண்ணீர் துளிகள் சிதறின.. கண்களை மூடி இறைவனுக்கு நன்றி சொன்னான்.., தன் ஒரு நாள் வரம் முடிந்தது !
By Rameez
😭😭😭
Heart touching story❤ , I can't stop my tears after reading this story 😭
வாழ்த்துக்கள் மச்சி🫂🫂🫂 மனதிற்கு நெருக்கமானவும் நேர்த்தியானவும் உள்ள கதை 🤝🤝 எழுத்து பணி தொடர மேலும் வாழ்த்துக்கள் 🫂🫂🫂🫂